மர்மமான முறையில் உயிரிழந்துள்ள பெண் – இரவு நேரத்தில் ஊர் மக்கள் அச்சம்

0

கல்கிரியாகம – போகஹாவெவ பகுதியில் வீட்டு தோட்டம் ஒன்றில் இருந்த கிணற்றில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்துள்ள பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ள பெண் போகஹாவெவ -தம்புலுஹல்மில்லவெவ பகுதியை சேர்ந்த 60 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது.

நேற்று இரவு 7.00 மணியளவில் வீட்டின் பின்புறத்தில் அமைந்துள்ள குளியலறையில் அவர் நீராடி கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குளியலறையில் சுமார் 20 மீட்டர் தொலைவில் இருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெறும் போது அவரது கணவர் வீட்டில் இருந்துள்ளதோடு, மனைவி குளிலறையில் இல்லாதை அறிந்த அவர் அயலவர்களிடம் இது தொடர்பில் கூறியுள்ளார்.

பின்னர் அயலவர்கள் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது பெண்ணின் சடலம், நிர்வாண நிலையில் கிணற்றில் மிதந்தவாறு காணப்பட்டுள்ளது.

மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளுக்கு அமைய பெண்ணின் மரணம் கொலையாக இருக்கலாம் என சந்தேகித்துள்ள காவல்துறை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here