சுவிஸ் குடியுரிமையை இழந்து தவிக்கும் சினிமா பிரபலம்!

0

சுவிஸ் குடியுரிமையை இழந்த காரணத்தினால் வாழ்க்கையை இழந்த இலங்கை அரசியல் பிரபலம்

சுவிட்சர்லாந்து குடியுரிமையை இழந்த காரணத்தினால் 37 ஆண்டு திருமண வாழ்க்கையை இழக்க நேரிட்டதாக இலங்கையின் அரசியல் பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகையும் அரசியல் பிரபலமுமான கீதா குமாரசிங்க அபயாராமய விஹாரையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

தன்னுடன் இணைந்து திருமண பந்தத்தை தொடர வேண்டுமாயின் சுவிட்சர்லாந்து குடியுரிமையை விட்டுக் கொடுக்க வேண்டாம் என கணவர் கூறியதாகவும் அதனை தாம் நிராகரித்து இன்று 37 ஆண்டு குடும்ப வாழ்க்கையை இழந்து நிற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாய் நாட்டுக்காக அவர் இவ்வாறான ஓர் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் சுவிட்சர்லாந்து இரட்டைக் குடியுரிமையை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளதாகவும், இலங்கையில் எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தலில் தாம் போட்டியிட முடியுமா என்பது குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் விரைவில் கருத்து கோர உள்ளதாகவும் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here