காணிகளை விடுவிக்க நாமல் ராஜபக்ச ஆலோசனை!

0

வடக்கு, கிழக்கில் காணி விடுப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள சில காணிகளின் உரிமையாளர்கள் நீண்டகாலமாக வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவிட்டு, தற்போது நாடு திரும்பி அவற்றுக்கான உரிமையை கோருகின்றனர்.

இந்த நிலையில், அவர்களுக்காக கடந்த 30 வருடங்களாக குறித்த காணிகளில் வசித்து வந்த மக்களை வெளியேற்றுவது நியாயமில்லை என்று நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த விடயத்தில் அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் செவிமடுத்து, அதன் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here