பாரிய விபத்தில் 20 பேர் படுகாயம்: பலரின் நிலை கவலைக்கிடம்!

0

திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் இன்று மாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 20 பேர் படுகாயமடைந்து கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நாவலப்பிட்டி பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று பத்தனை மவுண்ட்வேர்ணன் பகுதியில் மண்மேடில் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் பேருந்தில் பயணித்தவர்கள் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும், காயங்களுக்கு உள்ளாகியவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் திம்புள்ள, பத்தனை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையே விபத்துக்கு காரணம் எனவும், விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here