கொழும்பிலும் தங்கியிருந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு!

0

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பலர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைவதற்கு முன்னர்கொழும்பில் உள்ள பாதுகாப்பான இடங்களில் தங்கியிருந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் த ஹிந்து நாளிதழ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த சுமார் 90 பேர் 2016 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை ஐஎஸ்ஐஎஸ்அமைப்பில் இணைந்துள்ளனர்.

அவர்களுள் பஹ்ரெய்ன், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவற்றில் தங்கியிருந்த கேரளாவைச்சேர்ந்தவர்களும் அடங்குகின்றனர்.

2016 ஆம் ஆண்டு முதல் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்தவர்களுள் கேரளாவைச் சேர்ந்த 16 பேர் தாக்குதல்களின் போது உயிரிழந்துள்ளனர் என இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here