தந்தை செல்வாவிற்கு மட்டக்களப்பில் ஜனனதின நிகழ்வுகள்!

0

தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 120வது ஜனனதின நிகழ்வுகள் மட்டக்களப்பில் நடைபெற்றது.

இது தொடர்பான நிகழ்வு மட்டக்களப்பு நல்லையா வீதியில் உள்ள தமிழரசு கட்சியின் தலைமையத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன் உட்பட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது தந்தை செல்வாவின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்ட நினைவுத்தீபம் ஏற்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here