விரைவில் ஆட்சி எம்வசம் – மகிந்த மீண்டும் சூளுரை!

0

எதிர்க்கட்சித் தலைவர் செயலகத்தில் இருந்து வெளியேறி விரைவில் பிரதமர் செயலகத்துக்குச் செல்வேன் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் மூன்றாவது மாடியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் மகிந்த ராஜபக்ஷ நேற்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இதன்போதே அவர், “எதிர்க்கட்சித் தலைவர் செயலகத்தில் இருந்து மீண்டும் இரண்டாவது மாடியில் உள்ள பிரதமர் செயலகத்துக்கு விரைவில் திரும்பி வருவதற்கான எல்லாவற்றையும் செய்வேன் என்று மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 17 ஆவது எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்ஷ தற்போது இருக்கிறார். இவர் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்பது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே, 2004இல் இவர் இந்தப் பதவியை வகித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here