ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விற்க்கும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ :உறவில் விரிசல்

0
5

விரைவில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு விவாகரத்தில் முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்துள்ளார்.நேற்று ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்பாளர் ஒருவரை நிறுத்த பொதுஜன பெரமுன முயற்சிக்கும் அதேவேளை சுதந்திர கட்சி தரப்பிலிருந்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை வேட்பாளராக நிறுத்த முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனால் இரு தரப்பினரிடையே உட்கட்சி முறுகல் நிலை அதிகரித்துள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here