ஜனாதிபதியின் தலைமைத்துவத்தை ஒட்டகத்துடன் ஒப்பிட்டார் சரத் பொன்சேகா

0
23

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தை ஒட்டகத்துடன் ஒப்பிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்த குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

அங்குதொடர்ந்தும் கருத்து வெளியிட்ட சரத் பொன்சேகா, “நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கெல்லாம் ஜனாதிபதியே பிரதான காரணம். அரசால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு அவர் ஒத்துழைப்பு வழங்குவதில்லை.

அதுமட்டுமல்ல ஆளுங்கட்சி உறுப்பினர்கள் நன்மை செய்தால்கூட தனது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக அதை தடுத்து நிறுத்தி, காலைவாரும் செயலில் இறங்கியுள்ளார்.

வெளிநாடுகளுடனான வர்த்தக உடன்படிக்கை, உயர்தர மாணவர்களுக்கு ‘டெப்’ வழங்கும் யோசனை என அனைத்து விடயங்களிலும் எதிர்மறையான பார்வையையே ஜனாதிபதி செலுத்தி வருகிறார்.

அமைச்சர்கள் மட்டுமல்ல, இன்னும் ஐந்து, ஆறு மாதங்களில் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள்கூட ஜனாதிபதியின் கருத்துக்கு கட்டுப்படமாட்டார்கள். இதுதான் யதார்த்தம்.

அன்று மஹிந்த சிந்தனையை முன்னெடுத்த மஹிந்த, எமது நெஞ்சில்தான் சுட்டார். அவருக்கு எதிராக போராடினோம். ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினோம்.

இறுதியில் மெதமுலனவில் ஜன்னலில் தொங்கவேண்டியநிலை அவருக்கு ஏற்பட்டது. ஆனால், இன்று மைத்திரி சிந்தனை எம் முதுகில் குத்துகின்றது.

ஒட்டகப் படைக்கு, சிங்கம் தலைமைத்துவம் வழங்கினால் போரில் ஒட்டகப்படை வெற்றிபெறக்கூடும். ஆனால், சிங்கப்படைக்கு, ஒட்டகம் தலைமைத்துவம் வழங்கினால் சமரில் வெற்றிபெறமுடியாது.

இந்த அரசிலும் சிங்கம்போல் செயற்படக்கூடியவர்கள் இருக்கின்றனர். ஆனால், ஒட்டகமொன்றே தலைமைத்துவம் வழங்குகின்றது. பிரதமரை அல்ல, அரச தலைவரையே நான் இவ்வாறு குறிப்பிடுகின்றேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here