கல்முனை மாநரசபை மீண்டும் பறிபோனது!

0

அம்பாறை மாவட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கல்முனை மாநரசபையின் முதல் அமர்வு இன்று பரபரப்பாக நடைபெற்றது.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் சபையின் சபாமண்டபத்தில் இன்று பி.ப 2.30 மணிக்கு நடைபெற்றது.

இதில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத்திற்கான மேயர், பிரதிமேயர் தெரிவு என்பது மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

அந்த வகையில் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இத்தெரிவு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இம்முறை இச்சபைக்கு 9 கட்சிகளும் 2 சுயேச்சைகளும் நியமனப்பத்திரத்தை தாக்கல் செய்தன. இருந்தும் 2 சுயேச்சை அணிகளின் நியமனப்பத்திரம் நிராகரிக்கப்பட்டன.

எனவே 9 கட்சிகளும் 4 சுயேச்சைகளும் போட்டியிட்டன. ஆதலால் இங்கு 559 வேட்பாளர்கள் களத்தில் குதித்து தற்போது தொங்கு உறுப்பினர் உள்ளிட்ட 41 உறுப்பினர் தெரிவாகியுள்ளனர்.

இதில்

ஐக்கிய தேசியக்கட்சி (மு.கா) 12ஆசனங்கள்
சுயேச்சைக்குழு 4(சாய்நதமருது) 9ஆசனங்கள்
தமிழரசுக்கட்சி(த.தே.கூ) 7ஆசனங்கள்
அ.இ.ம.கா 5ஆசனங்கள்
தமிழர் விடுதலைக் கூட்டணி 3ஆசனங்கள்
தேசிய காங்கிரஸ் 1ஆசனம்
நல்லாட்சிக்கான தேசியமுன்னணி 1ஆசனம்
ஸ்ரீல.சு.கட்சி 1 ஆசனம்
சுயேச்சைக்குழுஇரண்டு 1ஆசனம்
சுயேச்சைக்குழுமூன்று 1ஆசனம் என அமைந்துள்ளது.
கல்முனை மாநகர சபையில் தமிழ் முஸ்லிம் உறுப்பினர்களை கொண்ட 31 ஆசனங்களுக்கிடையே வாக்கெடுப்பு இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் மேயர் பதவிக்கு எம்.றகீம் சட்டத்தரணி மற்றும் த.தே.கூட்டமைப்பு சார்பில் கென்றி மகேந்திரனது பெயரும் பரிந்துரைக்கப்பட்டது.

இருவருக்குமான. தெரிவு திறந்தவெளி வாக்கெடுப்பில் விடப்பட்டபோது ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து தெரிவான ஏ. எம். றகீப் 27 வாக்குகளைப்பெற்று கல்முனை மாநகரசபையின் மேயராக தெரிவு செய்யப்பட்டார்.

அவருடன் போட்டியிட்ட கென்றி மகேந்திரன் 7 வாக்குகளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பிரதி மேயர் பதவிக்கு 3 பேரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டது. அந்த வகையில் அ.இ. மக்கள் காங்கிரஸ், த.தே.கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய மூன்று கட்சிகளிலும் இருந்து பிரேரிக்கப்பட்டார்கள்.

இந்த திறந்தவெளி வாக்கெடுப்பின் போது தமிழர் விடுதலை கூட்டனி சார்பாக போட்டியிட்ட காத்தமுத்து கோணேஸ் 15 வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here