திடீரென தீப்பிடித்த முச்சக்கரவண்டி: சாரதியும், பயணியும் தப்பியோட்டம்!

0

நாவலப்பிட்டி தலவாக்கலை பிரதான வீதியில் இன்று மாலை சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று கெட்டபுலா சந்தியில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக நாவலப்பிட்டி காவற்துறையினர் தெரிவித்தனர்.

பயணத்தின் போது முச்சக்கரவண்டியில் தீடீரென தீப்பிடித்துள்ள நிலையில், சாரதியும், பயணியும் முச்சக்கரவண்டியை விட்டு பாய்ந்துள்ளமையால் அவர்கள் இருவரும் எவ்வித தீக்காயங்களுமின்றி உயிர்தப்பியுள்ளனர்.

எவ்வாறாயினும் , தீயினை அணைக்க பிரதேசவாசிகள் முயற்சித்துள்ள போதிலும் முச்சக்கரவண்டி முற்றிலும் எரிந்து சேதமாகியுள்ளதாக எமது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here