தோட்டத் தொழிலாளியின் செல்லப்பிராணியான சிறுத்தை குட்டி!

0
3

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஸ்கெலியா கவரவில பெரிய சோலங்கந்த தேயிலை மலையிலிருந்து சிறுத்தை குட்டியொன்று பிடிக்கப்பட்டுள்ளது.

பிறந்துநான்கு அல்லது ஆறு நாள் நிரம்பிய கண்கள் கூட திறக்கப்படாத நிலையில்குறித்த சிறுத்தை குட்டியை உயிருடன் மீட்டுள்ளதாக நல்லதண்ணீர் வனஜீவி காரியாலயத்தின் அதிகாரியொருவர்தெரிவித்தார்.

சோலங்கந்த தோட்ட தொழிலாளர்களே இன்று காலை தேயிலை மலையிலிருந்து சிறுத்தை குட்டியை கண்டுபிடித்துள்ளனர்.

தாய் சிறுத்தையுடன், மேற்படி குட்டி சிறுத்தை தேயிலை மலையில் உலாவித்திரிந்துள்ளது.

தொழிலாளர்களை கண்டவுடன் தாய் சிறுத்தை குட்டி விட்டுச் சென்றுள்ளதாகவும், இதனையடுத்து தொழிலாளர்கள் அநாதரவாக நின்ற சிறுத்தை குட்டியை மீட்டுள்ளனர்.

மேலும், சிறுத்தை குட்டியை நல்லத்தண்ணி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த சிறுத்தை குட்டி போசனை செய்யக்கூடிய நிலையில் இல்லாது இருப்பதனால் இதனை உடவல மிருக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நல்லதண்ணீர் வனஜீவி உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்த சிறு த்தை குட்டியின் தாய் அண்மித்தே இருப்பதனால் அது குட்டியினை தேடிவரக்கூடும் என்பதால் அவதானமாக இருக்குமாறு பொது மக்களிடம்கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சிறுத்தை குட்டியின் தாய் அண்மித்தே இருப்பதனால் அது குட்டியினை தேடி வரக்கூடும் என்பதால் அவதானமாக இருக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்படட்டுள்ளது.

கடந்த சில வார காலமாக குறித்த தோட்டத்தில் சிறுத்தையின் நடமாட்டம் காரணமாக பொது மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும், இதனால் நாளாந்தம் பட்டாசு போடப்பட்ட பின் தேயிலை கொழுந்து பறிக்கச் செல்வதாகவும் பொது மக்கள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here