அவநம்பிக்கை பிரேரணையை பிரதமர் தோற்கடித்தமை குறித்து தம்மால் எந்த கருத்தையும் கூற முடியாது என்று, இலங்கை தொழிலாளார் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொட்டகலை பிரதேச சபiயின் தவிசாளராக தெரிவான ராஜமணி பிரசாத் மற்றும் பிரதி தவிசாளர் முத்துராமலிங்கம் ஜெயகாந்த் ஆகியோர் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் தொண்டமானும் கலந்து கொண்டிருந்தார்.
நிகழ்வின் நிறைவில், நேற்றைய அவநம்பிக்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கலந்து கொள்ளாமை குறித்து, எமது செய்தியாளர் கிஷாந்தன் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதன்போதே ஆறுமுகன் தொண்டமான் இதனை தெரிவித்திருந்தார்.
