காணாமல் போன அப்பாவை இலங்கயில் கண்டு பிடித்த சிங்கப்பூர் யுவதி!

0

27 ஆண்டுகளாக காணாமல் போயிருந்த தமது தந்தை இலங்கையில் இருப்பதை கண்டறிந்துள்ளதாக சிங்கப்பூர் யுவதி தெரிவித்துள்ளார்.

துர்கா கேசவ் என்ற இந்த யுவதி, தமது தந்தை தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமது தந்தையான கனகசுந்தரம் சோமசுந்தரம் கடந்த 1991ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தம்மையும் தாயையும் விட்டு இலங்கைக்கு சென்ற பின்னர் சிங்கப்பூருக்கு திரும்பவில்லை என்று துர்கா கேசவ் முன்னதாக தெரிவித்திருந்தார்.

தமது தந்தை யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்தவர் என்றும் அவரின் சகோதரர்கள் மன்னார் மடு – பண்டிவிரிச்சான் பகுதியில் வசித்து வருவதாகவும் துர்கா கேசவ் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், தமது தந்தை இலங்கையில் இருப்பதை தாம் உறுதி செய்துள்ளதாகவும், தமது தந்தையுடன் தொலைபேசியில் பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தமது தந்தை உள்ளிட்ட உறவுகளைக் காண விரைவில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் துர்கா கேசவ் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here