திருகோணமலை கரடி விவகாரத்தில் ஆளுநர் தலையீடு…!

0

திருகோணமலை, தம்பலகாமப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 97ஆம் கட்டை சிராஜ் நகர் பழக்கடை அருகில் கடந்த வியாழக்கிழமை 4 நபர்களை கரடி தாக்கியதில் நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இவ் விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம திருகோணமலை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் குறித்த கரடி சுட்டு வீழ்த்தப்பட்டமை தொடர்பில் இச் சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறும் வனஜீவராசிகள் அமைச்சுக்கும் பணிப்புரை விடுத்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹிதபோகொல்லாகம இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், தாக்குதல் நடத்திய குறித்த கரடியை சுட்டுக் கொல்வதற்கு இடமளியாது உரிய முறைப்படி அதனை கைப்பற்றியிருக்க வேண்டும்.

இவ் விடயம் தொடர்பிலான உரிய விசாரணைகளை நடத்தி தனக்கு அறிக்கை ஒன்றை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளதுடன்,

இதற்காக உரிய நடவடிக்கைகளையும் திருகோணமலை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் வனஜீவராசிகள் அமைச்சு நடவடிக்கை களை ஆராய்ந்து அறிக்கைகளை சமர்ப்பிப்பர் எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here