நீராட சென்றிருந்த கஜனா சடலமாக வீட்டுக்கு கொண்டுவரப்பட்டார்!

0

கண்டியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியாகி உள்ளன.

வெள்ளவத்தையை சேர்ந்த தமிழ் யுவதி உட்பட ஐவர் நீராட சென்றிருந்த போது நேற்று நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கண்டிக்கு சுற்றுலா சென்றிருந்த போது ஹுலு கங்கையில் மூழ்கிய நிலையில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

ஐந்து பேரினதும் பிரேத பரிசோதனைகள் கண்டி பொது மருத்துவமனையில் இன்று இடம்பெற்றன. அதனை தொடர்ந்து உறவினர்களிடம் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த அனர்த்தம் காரணமாக 23 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்களே உயிரிழந்துள்ளனர்.

ஹங்வெல்ல பிரதேசத்தின் ஆடை தொழிற்சாலையொன்றில் பணி புரியும் ஊழியர்கள் சிலர் சுற்றுலா பயணம் சென்றிருந்த போது இந்த அனர்தம் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியாகி உள்ளன.

கண்டியை சேர்ந்த 26 வயதான செறில் அன்ரியா பென்ஸ், கொழும்பு வெள்ளவத்தை சேர்ந்த 26 வயதான கஜனா சிவநாதன், ராவதாவத்தை சேர்ந்த 23 வயதான பாத்திமான நுஸ்ரா, கனேமுல்லயை சேர்ந்த 30 வயதான சுசில் மஞ்சுள, கிரிந்திவெலவை சேர்ந்த 28 பிரியங்கர பிரேம்குமார் என்பவர்களே இந்த அனர்த்தம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here