கனடாவில் மிருகங்களைப் போன்று பத்து பேர் கொல்லப்பட்டதாக பெண் ஒருவர் தகவல்..!

0

கனடாவில் மிருகங்களைப் போன்று பத்து பேர் கொல்லப்பட்டதாக இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

கனடாவில் வாழ்ந்து வரும் ரங்கிக்கா கருணாதிலக்க என்ற இலங்கை பெண்மணி, அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை ரொரன்டோவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து அவர் கருத்து வெளியிட்டார்.

இந்த அனர்த்தத்தில் தனது நண்பி ரேனுகா அமரசிங்க படுகொலை செய்யப்பட்டமை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ரேனுகா மரணத்தை தழுவும் வயதை கொண்டிருக்கவில்லை. இதுவொரு கொடுமையான நிகழ்வு.

தாக்குதல் சம்பவத்தில் அவர் காயங்களுடன் தப்பியிருப்பார் என்றே நம்பியிருந்தேன். எனினும் அவர் உயிரிழந்திருப்பார் என நான் நினைக்கவில்லை.

இது எப்படி நடந்திருக்கும். வீதியில் உயிரிழந்து கிடக்க வேண்டியவர்கள் அல்ல அவர்கள். மிருகங்கள் போன்று கொல்லப்பட்டனர். மிருகங்கள் கூட இப்படி உயிரிழக்குமா என தெரியவில்லை.

ரேனுகா எனது சகோதரி போன்ற ஒருவராகும். 13 வருடங்களாக அவரை எனக்குத் தெரியும். கடந்த இரண்டு வருடங்களில் நாங்கள் மிகவும் நெருக்கமானோம்.

தனது ஏழு வயது மகனுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். பிள்ளைக்கு எனி யார் தாயை கொடுப்பார்கள்.

அவரது மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாது. அதனை கற்பனை கூட செய்ய முடியவில்லை. அவர் எங்கள் மனங்களில் எப்போதும் இருப்பார்…” என ரங்கிக்கா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதுடன், 15 பேர் காயமடைந்தனர்.

பத்துப் பேரில் இலங்கையின் ஹொரண பிரதேசத்தை சேர்ந்த ரேனுகா அமரசிங்க என்ற 48 வயதான பெண் கொல்லப்பட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here