குடும்ப பிரச்சினை காரணமாக இரண்டு குழந்தைகளுக்கு தந்தை செய்த காரியம்..!

0

தந்தையொருவர் தனது இரண்டு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்திய அதிர்ச்சி சம்பவம் சாவகச்சேரி -மீசாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

35 வயதான தந்தை, தனது 10 வயது மகனுக்கும், 7 வயதான மகளுக்கும் விஷம் கொடுத்து தானும் இவ்வாறு அருந்தியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த மூவரும் கவலைக்கிடமான நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக பிள்ளைகளின் தாயார் இவர்களை பிரிந்து சாவகச்சேரி பகுதியில் வசித்து வருவதாக காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.

இவர்கள் விஷம் அருந்தியதற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here