தண்டவாளத்தில்  தலையை வைத்து இளைஞன் உயிரிழப்பு – பொலிஸார் தீவிர தேடுதல்…!

0

இளைஞர் ஒருவர்  தண்டவாளத்தில்  தலையை வைத்து இருந்த நிலையில் புகையிரதம் தலைபகுதியில் ஏறிய நிலையில் இளைஞர்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தொடக்கம் புத்தளம் நோக்கி பயணித்து கொண்டிருந்த புகையிரதமே இவ்வாறு தலையில் மேல் ஏறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று இரவு சிலாபம் – அளுத்வத்த பிரதேசத்திலே இளைஞர் இவ்வாறு   உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது.

புகையிரத ஊழியர்களினால் சடலம் சிலாபம் மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த இளைஞர் யார் என்பதனை அடையாளம் காண்பதற்கு காவற்துறை தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here